நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது - ஜி.கே.வாசன்

நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது - ஜி.கே.வாசன்
Published on

சென்னை,

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது".

நாங்குநேரியில் நடந்த சம்பவம் சாதிப் பிரச்சனை அடிப்படையில் நடந்துள்ளது. குறிப்பாக மாணவர்களிடையே இது போன்ற உணர்வு ஏற்படக் கூடாது. இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

மாணவர்களிடையே சாதி ரீதியான வெறுப்புணர்வை யாரும் தூண்டக் கூடாது. இது போன்ற சம்பவங்களும், எண்ணங்களும் நாட்டை பின்நோக்கி தள்ளிவிடும், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். வருங்காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களும், எண்ணங்களும் ஏற்படாதவாறு அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அரசு பள்ளிக் கல்வித்துறையும் சரி, அரசு பள்ளியின் தலைமையும் சரி இதுபோன்ற சம்பவங்களில் தொடர் கண்காணிப்புத் தேவை.  மாணவர் சமுதாயம் வருங்கால இந்தியாவை உருவாக்க கூடிய சமுதாயம்.

அரசும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களை நல்வழிப் படுத்தக் கூடிய, நன்மைபயக்க கூடிய வழிமுறைகளை போதிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com