சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல: பிரச்சினைகளை பேசி முடிக்க வேண்டும் - திருநாவுக்கரசு எம்.பி

சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல என திருநாவுக்கரசு எம்.பி கூறியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல: பிரச்சினைகளை பேசி முடிக்க வேண்டும் - திருநாவுக்கரசு எம்.பி
Published on

புதுக்கோட்டை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நெல்லை மாவட்டத்தலைவரை மாற்றக்கோரி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்தபோது சத்தியமூர்த்தி பவனே போர்க்களம் போல காட்சி அளித்தது.

பின்னர், அங்கு தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் உடனடியாக மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தியதால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு கூறியுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டையில் அவர் நிருபர்களை சந்திக்கையில் கூறியதாவது,

ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் வேளையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல. இனியும் இது போன்று நிகழாமல் இருக்க கட்சி நிர்வாகிகள் முயல வேண்டும் உட்கட்சி பிரச்சினைகளை கட்சி அலுவலகத்திலேயே பேசி முடித்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com