பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம்: கொலை செய்த பெண்ணின் வீடு சூறை..!

பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணின் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடினர்.
பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம்: கொலை செய்த பெண்ணின் வீடு சூறை..!
Published on

காரைக்கால்,

காரைக்கால் நேருநகரைச் சேர்ந்த ராஜேந்திரன்-மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன் (வயது 13). இவர் அப்பகுதியில் உள்ள சர்வைட் ஆங்கிலப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் முதல் மாணவனாக வந்தது பொறுக்காமல், அதே பள்ளியில் படிக்கும் சகமாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவன் பாலமணிகண்டனை கொலை செய்தார்.

புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சகாயராணி விக்டோரியாவை கைது செய்தனர்.

இந்த நிலையில், பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணின் வீட்டை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com