தனியார் ஷூ கம்பெனியில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

ஆம்பூர் அருகே தனியார் ஷூ கம்பெனியில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தனியார் ஷூ கம்பெனியில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
Published on

ஆம்பூர்

ஆம்பூர் அருகே தனியார் ஷூ கம்பெனியில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

ஆம்பூரை அடுத்த கொமேஸ்வரம் மற்றும் ஏ கஸ்பா பகுதியில் இயங்கும் தனியார் ஷூ தொழிற்சாலையில் சென்னை வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சந்தோஷ் தலைமையிலான வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் செல்போன் மூலம் தகவல்கள் வெளியே பரவுவதை தடுக்க ஜாமர் கருவி பொருத்தி நிறுவனங்களில் உள்ள பதிவேடுகள் கணக்கு விவரங்களை ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று 3-வது நாளாக சோதனை குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இன்னும் ஓரிரு நாள் வரை சோதனை தொடரலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com