கூடலூரில் 29 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு

வருமான வரித்துறை சோதனையில் சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூடலூரில் 29 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜெ.தாமஸ். இவர் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகளின் மாநில துணைத்தலைவராக உள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தாமஸ் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல்கள் வந்தது. இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், 2 கார்களில் புறப்பட்டு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள். தெடர்ந்து வீட்டிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் சுமார் 29 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில் சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com