மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் தத்தளித்த ஆறு மீனவர்களை மீட்டது இந்தியக் கடலோரக் காவல் படை

படகின் இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டறிந்து மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் தத்தளித்த ஆறு மீனவர்களை மீட்டது இந்தியக் கடலோரக் காவல் படை
Published on: 

சென்னை,

மாமல்லபுரம் கடற்கரைக்கு அப்பால் நடுக்கடலில் ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படை மீட்டது.

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்

இந்தியக் கடலோரக் காவல் படை கப்பலான 'சுஜய்', நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இரவு சுமார் 10 மணியளவில் 'ஸ்ரீ பாலாஜி' என்ற மீன்பிடிப் படகிலிருந்து ரேடியோ கருவி மூலம் அவசர அழைப்பு வந்தது. அப்படகு மாமல்லபுரத்திற்கு வடகிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தது. உடனடியாக அங்கு விரைந்த கடலோரக் காவல்படை கப்பல் சுஜய், அப்பபடகை ஆராயந்தது. அப்போது, படகின் அடிப்பகுதியில் ஏற்பட்டிருந்த கடுமையான சேதம் காரணமாக அதன் இயந்திர அறையில் தண்ணீர் புகுந்தது தெரிய வந்தது. படகில் இருந்த ஆறு பணியாளர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தநர்.

பாதுகாப்பாக மீட்பு

கடலில் நிலவிய மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், 'ஐ சி ஜி எஸ் சுஜய்' கப்பலின் பணியாளர்கள், இருள் சூழ்ந்த இரவிலும் விழிப்புடன் திறன்பட செயலாற்றி, படகின் இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டறிந்து மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டனர். ஆபத்தில் சிக்கியிருந்த படகில் இருந்த ஆறு பேரையும் அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களுக்குக் கப்பலின் மருத்துவர் முதலுதவி அளித்தார். பின்னர் அவர்கள் ஆரோக்கியமான நிலையில் சென்னை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தியக் கடலோரக் காவல் படை

இந்த வெற்றிகரமான நடவடிக்கை, கடலில் ஆபத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் மாலுமிகளுக்குத் தக்க நேரத்தில் உதவுவதிலும், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதிலும் இந்தியக் கடலோரக் காவல் படை கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியக் கடலோரக் காவல் படை 'கடலில் முதல் மீட்புக் குழு'வாக திகழ்கிறது; இதன் மூலம் மீனவ சமூகம் மற்றும் மாலுமிகள் மத்தியில் நம்பிக்கையைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.

உயிர்களைப் பாதுகாத்தல், கடல்சார் சூழலைப் பாதுகாத்தல், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாத்தல் ஆகிய தனது குறிக்கோளில் இந்தியக் கடலோரக் காவல் படை உறுதியாக உள்ளது என்பதை இந்த மீட்பு நடவடிக்கை மீண்டும் நிரூபிக்கிறது. இந்திய கடலோர காவல்படை, "நாங்கள் பாதுகாக்கிறோம்" என்ற தனது நிலையான குறிக்கோளுக்கேற்ப செயல்படுவதை இது காட்டுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com