

நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள பெருமாள்நகரை சேர்ந்தவர் துரை (வயது 47), கொத்தனார். சம்பவத்தன்று இவர் மூலைக்கரைப்பட்டிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பட்டபிள்ளைபுதூர் அருகே வந்தபோது, சாலையில் பழுதாகி நின்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.