விபத்தில் காயம் அடைந்தவர் சாவு

விபத்தில் காயம் அடைந்தவர் இறந்தார்.
விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
Published on

முக்கூடல்:

அம்பை அருகில் உள்ள கோவில்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் கடந்த 13-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அரசன்குளம் ஊருக்கு கீழ்பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் முருகன் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை முருகன் இறந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com