விபத்தில் காயம் அடைந்தவர் சாவு

நாங்குநேரி அருகே விபத்தில் காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
Published on

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள மாவடியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 37). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வாகைகுளத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாரதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com