விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

நாங்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் இறந்தார்.
விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
Published on

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளை புதூரைச் சேர்ந்தவர் இசக்கித்துரை (வயது 24). இவர் கடந்த 9-ந்தேதி நாங்குநேரியில் இருந்து பட்டப்பிள்ளை புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தென்னிமலை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கித்துரை நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com