

சென்னை,
சென்னை அசோக் நகரில் முதல்-அமைச்சர் படைப்பக பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி வாயில் பொய்யைத்தவிர எதுவும் வராது. பொய்யிலே பிறந்து வளர்ந்து வந்தவர். செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணனிடம் கேட்டால் எடப்பாடி பழனிசாமியின் வண்டவாளம் தெரியும்.தவெகவினர் தாக்கியதில் மகளிர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் அரண்டுபோகும் அளவு அறிவிப்புகள் இடம்பெற உள்ளன. பிப்.26-ம் தேதிக்குள் 10 முதல்-அமைச்சர் படைப்பகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.