ஊராட்சி ஒன்றியங்களில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் 12-ந் தேதி நடக்கிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலி பணியிடங்களில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான நேர்காணல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
ஊராட்சி ஒன்றியங்களில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் 12-ந் தேதி நடக்கிறது
Published on

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாகவது:-

திருவள்ளூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகபட்சம் 6 மாத காலத்திற்கு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இந்த பணிக்கு அமைப்பியல் துறையில் பட்டப்படிப்பு பி.இ, சிவில் என்ஜினீயரிங் மற்றும் பட்டய படிப்பு, டிப்ளமோ முடித்து அதே துறையில் களப்பணியில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு வருகிற 12-04-2023 நடைபெறும் நேர்காணலில் பங்கு பெற்று வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்கள் பயன்பெறலாம். இந்த பணிக்கு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை சேர்த்து அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

நேர்காணலுக்கு கொண்டுவர வேண்டிய சான்றுகள் கல்விச்சான்று, பள்ளி மாற்றுச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பணி முன் அனுபவ சான்று, கணினி கல்வி தகுதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவை ஆகும். நேர்காணல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-27663808 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com