பூசாரிகள் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் - கவர்னர் ஆர்.என்.ரவி

அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பூசாரிகள் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் - கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதனால் அயோத்தி நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் காட்சி அளிக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் கோவிலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது.

நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும்போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com