கச்சத்தீவை மீட்கக்கோரும் விவகாரம்: அவசர வழக்காக நாளை விசாரணை- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உறுதி

கச்சத்தீவை மீட்கக்கோரும் விவகாரத்தில் அவசர வழக்காக நாளை விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உறுதி அளித்தனர்.
கச்சத்தீவை மீட்கக்கோரும் விவகாரம்: அவசர வழக்காக நாளை விசாரணை- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உறுதி
Published on

சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன், கடந்த 2 வாரத்துக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும் படகுகளை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து ஒத்தி வைத்தது. இந்த நிலையில் நேற்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, கச்சத்தீவு பகுதியில் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எனவே இந்த விவகாரம் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர். அதற்கு நீதிபதிகள், வருகிற புதன்கிழமை (அதாவது நாளை) இந்த சம்பந்தமான வழக்கை விசாரிப்பதாக உறுதி அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com