பீரோவில் இருந்த நகைகள் மாயம்

சிவகாசியில் பீரோவில் இருந்த நகைகள் மாயமானது.
பீரோவில் இருந்த நகைகள் மாயம்
Published on

சிவகாசி,

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட அம்மன் நகரில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 33). இவருக்கு சொந்தமான 3 பவுன் நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த நகைகளை சரி பார்த்த போது அவைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மனைவி முனீஸ்வரி இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவத்தில் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படாமல் அதன் சாவியை கொண்டு திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வீடு புகுந்து திருடிய நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com