எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் -கி.வீரமணி வலியுறுத்தல்

முதல்-அமைச்சர் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதா? எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் -கி.வீரமணி வலியுறுத்தல்.
எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் -கி.வீரமணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயகத்தில்-அதுவும் சட்டமன்ற, நாடாளுமன்ற ஆட்சி முறையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பொறுப்பாகும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, தாம் முன்னாள் முதல்-அமைச்சர் பதவி வகித்தவர் என்ற நிலைப்பாட்டைக்கூட மறந்துவிட்டு அல்லது 'துறந்துவிட்டு', இன்றைய முதல்-அமைச்சர் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறி, தமது பதவியின் பொறுப்பை சிறுமையாக்கி விடுகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமே முதலீடு செய்ய செல்லுகிறாரா?, முதலீடுகள் செய்வோரை அழைக்கச்செல்லுகிறாரா? என்று கேள்வி கேட்பதை அரசியல் அறியாமையின் உச்சம் என்றுதானே உலகம் பழிக்கும்? புரிந்துகொள்ள வேண்டாமா?.

அ.தி.மு.க. என்று தங்கள் கட்சியின் பெயர் எதற்கு வைக்கப்பட்டது? என்பதுகூட புரியாமல், கட்சியை-கொள்கையை அடமானம் வைத்து, தமது வருமானத்திற்கு பாதுகாப்பு தேடும் நிலையில், இப்படி பேசுவதா எதிர்க்கட்சி தலைவர் வேலை?.

பா.ஜ.க.வால் பிளக்கப்பட்ட இவர்கள் ஒருவர் மற்றவர் மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை தொகுத்துக்கொடுத்தாலே போதுமே. இனியாவது பொறுப்பை உணர்ந்து எதிர்க்கட்சி தலைவரும், அவரது பல அணியினரும் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com