பூண்டியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்..!

பூண்டியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களுடன் படியில் தொங்கியபடி சட்டமன்ற உறுப்பினர் பயணம் செய்தார்.
பூண்டியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்..!
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த பூண்டியில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பயனாளிகளுக்கு தங்கம் வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடைபயணமாக வந்தார்.

அப்போது பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் செல்லும் போது கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். போதிய பேருந்து இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்வதாகவும் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது பூண்டிலிருந்து புறப்பட வேண்டிய பேருந்து வந்து நின்றதால் மாணவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். அப்போது மாணவர்கள் பயணம் செய்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் வரை படியில் பயணம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com