ஆட்டை கொன்று மரத்தில் தொங்க விட்ட சிறுத்தையால் பரபரப்பு....!

கடையம் அருகே ஆட்டை அடித்து கொன்று மரத்தில் தொங்க விட்டு சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆட்டை கொன்று மரத்தில் தொங்க விட்ட சிறுத்தையால் பரபரப்பு....!
Published on

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சியில் மலையில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலையடிவாரத்திலுள்ள கிராமத்திற்குள் புகுந்து கால்நடை மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடையம் அருகே கடனாநதி அடிவார பகுதியில் உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பை சேர்ந்தவர் பட்டு. இவர் ஆடு மேய்த்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வீடு திரும்பினார்.

அப்போது அதில் ஒரு பெண் ஆடு காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று மாலை முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை மலை அடிவாரப் பகுதிகளில் அவர் தேடிப்பார்த்த போது ஒரு மரத்தில் ஆடு தொங்கி கொண்டு கிடப்பதை பார்த்து உள்ளார். அப்போது காணாமல் போன தனது பெண் ஆடு என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் நடத்தினர். அப்போது ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை மரத்தில் வைத்து தின்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com