அதிமுக உட்பட பாஜக அழித்தொழித்த கட்சிகளின் பட்டியல் வெகு நீளம் - ஜோதிமணி எம்.பி.

எங்களுக்கு எந்தக் கூட்டணிக் கட்சிகளையும் அழித்துப் பழக்கமில்லை என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அதிமுக உட்பட பாஜக அழித்தொழித்த கட்சிகளின் பட்டியல் வெகு நீளம் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கூட்டணி கட்சிகளையும் அழித்துவிட்டு அவர்கள் இடத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதை பாஜக நினைவில் கொள்ளட்டும். அசாம் கண பரிசத், SAD, PDP, JD(S),JD(U), Siva sena, HVM, அதிமுக உட்பட பாஜக அழித்தொழித்த கட்சிகளின் பட்டியல் வெகு நீளம்.

பாஜக தமிழ்நாட்டை அழிக்கத் துடிப்பதால் தான் அதைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு எந்தக் கூட்டணிக் கட்சிகளையும் அழித்துப் பழக்கமில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com