சிறுமி மாயம்

சிறுமி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி மாயம்
Published on

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி. சம்பவத்தன்று வீட்டில் உள்ளவர்களிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றாள். அதன் பின்னர் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com