விபத்தில் லாரி டிரைவர் பலி

விபத்தில் லாரி டிரைவர் பலியானார்
விபத்தில் லாரி டிரைவர் பலி
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் ஏ.வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் கண்ணன் (வயது 27). லாரி டிரைவர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் கண்ணன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.ஏ. வலையபட்டி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com