லாரி டிரைவர் மனைவி திடீர் மாயம்

சின்னசேலம் அருகே லாரி டிரைவர் மனைவி திடீர் மாயம் போலீசார் விசாரணை
லாரி டிரைவர் மனைவி திடீர் மாயம்
Published on

சின்னசேலம்

சின்னசேலம் அருகே பாண்டியன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி(வயது 26). லாரி டிரைவரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூகையூர் கிராமத்தை சேர்ந்த ஜமுனா ராணி(20) திருமணம் செய்து கொண்டார். சுபிக்ஷன்(2) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு சின்னசேலம் சென்ற ஜமுனா ராணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால் இது பற்றி ரகுபதியின் தாய் பழனியம்மாள்(52) கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜமுனாராணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com