உடன்குடியிலிருந்து கோவை சென்ற சொகுசு பஸ் திடீரென தீ பிடித்தது - பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பஸ் திடீரென தீ பிடித்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடன்குடியிலிருந்து கோவை சென்ற சொகுசு பஸ் திடீரென தீ பிடித்தது - பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
Published on

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ,உடன்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் டிரைவர், பயணிகள் உட்பட 37 பேர் பயணித்தனர். ஒட்டப்பிடாரம் அருகே வந்த போது பஸ்சின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து புகை வர ஆரம்பித்தது.

உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை கீழே இறங்க சொன்னார். பஸ்சில் தீப்பிடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். உடனே அவர்கள் பஸ்சில் இருந்து அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயனைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைக்க முயற்சித்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ்சில் தீ பிடிக்க ஆரம்பித்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com