பீரோவில் இருந்த 6½ பவுன் நகைகள் மாயம்

விருதுநகரில் பீரோவில் இருந்த 6½ பவுன் நகைகள் மாயமானது.
பீரோவில் இருந்த 6½ பவுன் நகைகள் மாயம்
Published on

விருதுநகர்

விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் அனிதா (வயது 25). இவரது கணவர் சுரேஷ். மத்திய ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அனிதா தனது வீட்டில் உள்ள பீரோவில் தனது 6 பவுன் நகைகளை ஒரு டப்பாவில் வைத்திருந்தர். ஆனால் பீரோவை பூட்டவில்லை. இந்நிலையில் சில நாட்கள் நகைகளை எடுக்காத நிலையில் தற்போது பீரோவில் டப்பாவை பார்த்த போது டப்பா அப்படியே இருந்த நிலையில் அதில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா இதுபற்றி விருதுநகர் புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com