செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு

செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரவாயல்,

விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அவர்கள் குடித்ததால் இறந்து போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணையில், செங்கல்பட்டு மாவட்ட மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் இளைய நம்பி (வயது 45), என்பவர் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார், நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி அங்கு பணிபுரிந்த சதீஸ் (27), மணிமாறன் (27), கதிர் (27), உத்தமன் (31) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த நிறுவனத்தில் இருந்த சிறிதளவு மெத்தனால் வேதிபொருளை பறிமுதல் செய்து சோதனைக்கு எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் தற்போது செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான விளம்பூர் விஜயகுமார் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com