முன்விரோதத்தில் பெண்ணை தாக்கியவர் கைது

முன்விரோதத்தில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
முன்விரோதத்தில் பெண்ணை தாக்கியவர் கைது
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐபேடு ஊராட்சியில் உள்ள வேலன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுனிதா (வயது 29). இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் நாகரத்தினம் (53) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15-ந் தேதி காலை சுனிதா வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது, நாகரத்தினம் அவரது மனைவி முனியம்மாள், மகன் கோபி ஆகியோர் சுனிதாவிடம் வாக்குவாதம் செய்து அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் அவர் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து நாகரத்தினத்தை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com