இளம்பெண்ணை தாக்கியவர் கைது

இளம்பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண்ணை தாக்கியவர் கைது
Published on

விழுப்புரம் நாராயணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன் மகள் கமருனிஷா (வயது 21). இவருடைய தங்கை நூரின்ஷிபாவை விழுப்புரம் குப்புசாமி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் தனுஷ் (23) என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நூரின்ஷிபா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 20 நாட்களாக பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். இந்த சூழலில் சம்பவத்தன்று தனுஷ், தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்துவரசென்றார். அதற்கு கமருனிஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், கமருனிஷாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com