தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

நெல்லை அருகே தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
Published on

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த பழவூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி மகன் மாசானம் (வயது 20). கூலித் தொழிலாளியான இவர் வேலைக்கு செல்வதற்காக நேற்று பழவூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோடகநல்லூர் கீழ அக்ரஹார தெருவை சேர்ந்த துரை என்பவரது மகன் அசோக் (22) மாசானத்திடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அவரை அவதூறாக பேசியதுடன் சட்டைப் பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது மாசானம் தடுக்கவே அசோக் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய மாசானம் கூச்சல் இடவே அசோக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகப்பெருமாள் வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com