தூக்கத்தில் நடந்து போது மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

தூக்கத்தில் நடந்த போது மொட்டை மாடியில் இருந்த கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தூக்கத்தில் நடந்து போது மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
Published on

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 32). இவர் தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வருகின்றார்.

தாய் தந்தை இறந்துவிட்டதால் சசிகுமார் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். இவர் கடந்த 12-ம் தேதி அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி உள்ளார். அப்போது திடீர் என்று எழுந்த சசிகுமார் தூக்கத்தில் நடக்க ஆரம்பித்து உள்ளார்.

இதில் மொட்டை மாடியின் விழுப்புக்கு சென்ற அவர் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் சசிகுமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்.

தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றவந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சசிகுமாரின் அண்ணன் தமிழரசன் அளித்த புகாரின் பேரில் களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com