மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
Published on

கீரனூர்:

பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 40). இவர் நேற்று முன்தினம் கீரனூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் மணவீட்டார் ஒரு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். குன்றாண்டார் கோவில் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜகோபால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிசிக்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com