வாலிபரை கத்தியால் குத்தியவர் சிக்கினார்

திண்டுக்கல் அருகே வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபரை கத்தியால் குத்தியவர் சிக்கினார்
Published on

திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியை சேர்ந்தவர் மோசஸ் (வயது 24). கூலித்தொழிலாளி. கடந்த 9-ந்தேதி இவர், வக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கும், அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (54) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், மோசசை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மோசஸ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை தேடி வந்தனர்.

இந்தநிலையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று வக்கம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த செல்வராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com