உருட்டுக்கட்டையுடன் மிரட்டியவர் கைது

உருட்டுக்கட்டையுடன் மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
உருட்டுக்கட்டையுடன் மிரட்டியவர் கைது
Published on

அரக்கோணம்

உருட்டுக்கட்டையுடன் மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று காலிவாரி கண்டிகை, ஷா நகர், அரக்கோணம் - திருவள்ளூர் ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரக்கோணம் - திருவள்ளூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அவ்வழியாக செல்லும் பொதுமக்களை உருட்டுக்கட்டை வைத்துக்கொண்டு அச்சுறுத்திக் கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் அரக்கோணம் குறிஞ்சி நகரை சேர்ந்த கோபிநாத் (வயது 21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து கோபிநாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com