மயிலம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

மயிலம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
மயிலம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
Published on

மயிலம், 

மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், மேல்மலையனூர் அடுத்த கம்பந்தாங்கள் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபருக்கும் வருகிற 10-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சமூக நல ஆலோசகர் ஸ்ரீதேவி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா, வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் பிருந்தாதேவி மற்றும் அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதியானதை அடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தியதோடு, சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். மேலும் சிறுமியை மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com