மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

ஆவுடையார்கோவில் ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
Published on

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டானி புரசக்குடி ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கோபாலபட்டினத்தில் மலைபோல் குப்பகள் குவிந்து கிடப்பதால் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தியும், இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இதனை வலியுறுத்தி தர்ணா, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மீமிசல் கிளை செயலாளர் அமீர் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com