மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம

கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம
Published on

திருவாரூர்:

மத்திய அரசு, கர்நாடகாவில் இருந்து நீரை பெற்று தர வேண்டும். டெல்டாவில் கருகும் குறுவை பயிரை காப்பாற்றிட காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விட வேண்டும். பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை மற்றும் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.அதன்படி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் தம்புசாமி, நிர்வாகி பிரகாஷ், கலியபெருமாள், கலைமணி, முருகையன், ஒன்றிய செயலாளர் இடும்பையன், நகர செயலாளர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com