கட்டுமான சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு

கட்டுமான சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்தார்
கட்டுமான சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
Published on

பேரையூர்

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 34) கொத்தனார். சம்பவத்தன்று பழனிக்குமார் அங்குள்ள வீட்டில் சாரம் கட்டி, அதில் ஏறி சுவரில் சிமெண்டு பூசிக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென்று சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனில்லாமல் பழனிகுமார் இறந்தார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com