வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
Published on

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பாபு (வயது 40) அப்பள வியாபாரி. இவரது மனைவி நாகலட்சுமி. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர். பாபுவின் சகோதரர் மகனுக்கு கடந்த 1-ந்தேதி திருவள்ளூரை சேர்ந்த காக்களூரில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பாபு தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு திருமணத்துக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்கநகை, நாகலட்சுமி மகளிர் சுய உதவி குழுவில் கடனாக பெற்று வைத்திருந்த ரூ.40 ஆயிரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து கொண்டு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com