மினி லாரி கவிழ்ந்து 45 ஆயிரம் முட்டைகள் சேதம்

தியாகதுருகம் அருகே மினி லாரி கவிழ்ந்து 45 ஆயிரம் முட்டைகள் சேதம்
மினி லாரி கவிழ்ந்து 45 ஆயிரம் முட்டைகள் சேதம்
Published on

கண்டாச்சிமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் சையத்குடு மகன் அன்சர் பாஷா(வயது 24). மினிலாரி டிரைவரான இவர் நாமக்கல்லில் இருந்து சுமார் 45 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் அருகே வடதொரசலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியில் இருந்த அனைத்து முட்டைகளும் உடைந்து சாலையில் வழிந்தோடியது. இதுபற்றிய தகவல் அறிந்து தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மினி லாரியை அப்புறப்படுத்தினர். சேதம்அடைந்த முட்டைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com