

சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
“அறநிலையத் துறைக்கு அமைச்சர், முதன்மைச் செயலாளர் இருவரும் பார்ப்பனர்களா? அனைத்து சாதியினர் அர்ச்சகர் சட்டம் என்ன ஆவது? ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவரையோ, பெண் அமைச்சரையோ நியமித்தால், அதுதான் மாற்றம். போராடி இழுத்து வந்த சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா?
3 சதவீதம் உள்ள பார்ப்பனர்களுக்கு 6 சதவீதம் அமைச்சரவையில் இடம் என்பதே அதிகப்படியானது. அதில், இந்து சமய அறநிலையத் துறையும் தாரை வார்க்கப்பட்டிருப்பது ஆபத்தானது, கண்டனத்திற்குரியது. இந்து சமய அறநிலையத் துறைக்கு பார்ப்பனரல்லாத அமைச்சரும், செயலாளரும் நியமிக்கப்பட வேண்டும். முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக விழித்துக் கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரையும், செயலாளரையும் மாற்ற வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.