மும்பை நாகர்கோவில் ரெயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த மர்ம நபர்

திண்டிவனத்தில் மும்பை நாகர்கோவில் ரெயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த மர்ம நபர் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது
மும்பை நாகர்கோவில் ரெயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த மர்ம நபர்
Published on

திண்டிவனம்

மும்பையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரெயில் திண்டிவனத்துக்கு நேற்று இரவு 9 மணியளவில் வந்தது. பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னர் அந்த ரெயில் திண்டிவனத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. அப்போது மர்ம நபர் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதையடுத்து ரெயிலில் இருந்து இறங்கிய அதிகாரிகள் எந்தப் பெட்டியில் என்ன பிரச்சினை என்பது குறித்து விசாரணை செய்தனர். அப்போது ரெயில் பெட்டியில் தண்ணீர் இல்லாததால் மர்மநபர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது தெரியவந்தது. இதன் பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு ரெயில் மீண்டும் திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com