பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து டிரைவர் சுப்பிரமணி மற்றும் கண்டக்டர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் புறப்பட்டனர். கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது போக்குவரத்து நெரிசலால் பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் பஸ்சை வழிமறித்து ஆர்ன் அடித்தால் வழிவிட முடியாதா என்று கேட்டிருக்கின்றனர். இதையடுத்து டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த பட்டாக்கத்தியை கொண்டு பஸ்சின் முன்புற கண்ணாடியை தாக்கியதில் பஸ் டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.

பஸ் கண்ணாடி உடைந்து விழுந்ததை கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், சந்தேகம்படும்படியான சில நபரின் பெயர்களை கேட்டு தெரிந்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com