மூன்றரை மாத பெண் சிசு சாவில் மர்மம்..? பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தையை அடக்கம் செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அத்திமரத்துர் கிராமத்தை சேர்ந்த முரளி-மஞ்சுளா தம்பதிக்கு மூன்றரை மாத பெண் குழந்தை இருந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து அஞ்செட்டி பேலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் சடலத்தை பெற்றேர் அடக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சந்திரமவுலி, அஞ்செட்டி பேலீசில் புகார் செய்தார். இதனையடுத்து அஞ்செட்டி போலீசார் குழந்தையின் பெற்றேர்களான முரளி, மஞ்சுளா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com