டெப்பாசிட் தொகை ரூ.25 ஆயிரத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை வழங்கிய தேசிய கட்சி வேட்பாளர்

டெப்பாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கி கிருபாகரன் பெஞ்சமின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
Published on

கோவை,

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக உடுமலையைச் சேர்ந்த கிருபாகரன் பெஞ்சமின் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டெப்பாசிட் தொகை ரூ.25 ஆயிரத்திற்கு, 10 ரூபாய் நாணயங்களை மூட்டை கட்டி எடுத்து வந்தார்.

அந்த நாணயங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கிருபாகரன் பெஞ்சமின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை பயன்படுத்த தயங்கி வருவதால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்ததாக கிருபாகரன் பெஞ்சமின் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com