திருப்பூரில் ரூ.29 கோடியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய புதிய கட்டிடம் மண்ணில் புதைந்தது

திருப்பூரில் பெய்து வரும் தொடர் மழையால் ரூ.29 கோடியில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம் மண்ணில் புதைந்தது.
திருப்பூரில் ரூ.29 கோடியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய புதிய கட்டிடம் மண்ணில் புதைந்தது
Published on

திருப்பூர்,

திருப்பூர் அருகே சின்னாண்டிபாளையம் குளம் அருகே மாநகராட்சி சார்பில் ரூ.29.3 கோடியில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நீர்நிலை பகுதியில் கட்டிடம் கட்டப்படுவதாக புகார் கூறி அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி 3 கட்டிடங்கள் தனித்தனியாக கட்டப்பட்டன. தற்போது கட்டித்தின் கான்கிரீட் பணி முடிந்து விட்டது. சுவர்களில் சிமெண்டு பூச்சு மட்டுமே நடைபெற வேண்டும்.

இடிப்பு

இந்த நிலையில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்தை சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. நேற்று 3 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் மண்ணில் புதைந்து சாய்ந்து இருந்தது. சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருந்தது.

நேரம் செல்ல செல்ல கட்டிடத்தின் விரிசல் அதிகமானது. இதையடுத்து விரிசல் விழுந்த கட்டிடம் நேற்று மாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை சுற்றி உள்ள மற்ற 2 கட்டிடங்களும் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கட்டிடத்தை சுற்றி மழை நீர் தேங்கி உள்ளது. புதிய கட்டிடம் திறப்பு விழா காணும் முன்னே இடிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com