மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் - விஜயகாந்த்

மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் - விஜயகாந்த்
Published on

சென்னை,

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை இதற்கு முந்தைய தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே தற்போதுள்ள புதிய அரசாவது மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com