நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் புதுமாப்பிள்ளை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் சீனுவாசன். நகராட்சி துப்புரவு பணியாளர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 22), ராணிப்பேட்டையை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். கடந்த மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். வந்தவாசி புதுத் தெருவில் உள்ள கார்வண்ணன் என்பரது வாடகை வீட்டில் மனைவியுடன் மோகன்ராஜ் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நண்பர்களை பார்க்க செல்வதாக மனைவியிடம் மோகன்ராஜ் கூறினாராம். அதற்கு அவரது மனைவி தடுத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்குள் சென்றார். வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டின் அறைக்குள் சென்றுபார்த்தபோது மோகன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவருடைய தந்தை சீனுவாசன் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com