பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலை

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலை
Published on

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

'சென்னை எண்ணூர் அருகே அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், திரவ அமோனியா குழாயில் கசிவு ஏற்பட்டதால், எண்ணூர் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் தகுந்த மருத்துவ சோதனைகள் நடத்தி, அவர்கள் உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், எண்ணூரிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க, தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com