

மதுரை,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களில் 27 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். 10 பேர் காயம் எதுவும் அடையவில்லை.
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்களில் 15 பேர் மதுரையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
100 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்த நிஷா அன்றிரவு பலியான நிலையில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் 6 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை மொத்தம் 16 பேர் உயிரிழந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.