

ஆத்தூர்
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் அம்மன் நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் பைத்தூர் சாலையில் குடகு பகுதியில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அந்த வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (65) என்பவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.