மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
Published on

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள சீராப்பள்ளி குஞ்சாம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60). இவர் தனது மொபட்டில் குஞ்சாம்பாளையத்தில் இருந்து வசந்தபுரத்திற்கு சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் அவரது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது நடந்தை முனியப்பன் கோவில் எதிரே சென்று கொண்டிருந்தபோது நடந்தை சாலப்பாளையத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (45) என்பவரது மோட்டார் சைக்கிள் முத்துசாமி மொபட்டில் பின்னால் மோதியது. இதில் முத்துசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com